இந்தியாவில் மேலும் 811 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,952பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்றால் 2 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,511 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,18,882 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 13,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 2,19,75,22,436 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 70,678 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.