இந்தியாவில் 8 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 15 பேர் பலி


இந்தியாவில் 8 ஆயிரத்தை தாண்டிய  தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 15 பேர் பலி
x

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 15 பேர் பலியாகினர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று அதிரடி மாற்றம் ஏற்பட்டது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழே வந்தது.

இந்தநிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 8,822 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 8,084, நேற்று 6,594 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,822 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,36,695 லிருந்து 4,32,45,517 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,61,370 லிருந்து 4,26,67,088 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகினர். இதுவரை 5,24,792 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,548 லிருந்து 53,637 ஆனது. இந்தியாவில் இதுவரை 195.50 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 13,58,607 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story