சியாச்சின் பனிமலையில் செயற்கை அடிப்படையிலான இணைய சேவை: ராணுவம் ஏற்பாடு


சியாச்சின் பனிமலையில் செயற்கை அடிப்படையிலான இணைய சேவை: ராணுவம் ஏற்பாடு
x

உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் செயற்கைகோள் அடிப்படையிலான இணைய சேவையை ராணுவம் கொண்டு வந்துள்ளது.

உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் செயற்கைகோள் அடிப்படையிலான இணைய சேவையை ராணுவம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக ராணுவத்தின் 14-வது படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் 19,061 அடி உயரத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிபிஎன்எல் (பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட்) சியாச்சினில் ராணுவத்துக்கு இணைய இணைப்பு கொடுத்துள்ளது


Next Story