ராணுவ சீருடைக்கு அறிவுசார் சொத்துரிமை இந்திய ராணுவம் பெற்றது
இந்திய ராணுவ தளபதி, கடந்த ஆண்டு ராணுவ தினத்தின்போது, மேம்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை அறிமுகப்படுத்தினார்.
புதுடெல்லி,
இந்திய ராணுவ தளபதி, கடந்த ஆண்டு ராணுவ தினத்தின்போது, மேம்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை அறிமுகப்படுத்தினார்.
இந்தநிலையில், வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக அச்சீருடைக்கு இந்திய ராணுவம் அறிவுசார் சொத்துரிமை வாங்கி உள்ளது. வடிவமைப்புக்கான காப்புரிமை, இன்னும் 10 ஆண்டுகளுக்கு ராணுவத்திடமே இருக்கும். அதன்பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படக்கூடு்ம்.
வியாபாரிகள் அனுமதியின்றி அந்த சீருடையை உற்பத்தி ெசய்து வெளிச்சந்தையில் விற்பதை தடுப்பதற்காக ராணுவம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது.
அதை மீறி யாராவது போலியாக தயாரித்தால், அவர்கள் மீது ராணுவம் சட்ட நடவடிக்கை எடுக்கும். ராணுவம் நடத்தும் கேண்டீன்களில் மட்டுமே இந்த சீருடை விற்கப்படும்.
Related Tags :
Next Story