அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர் சந்திப்பு
உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர் என கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர் சந்தித்துள்ளார். ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெறும் நிலையில் இருவரும் சந்தித்து உரையாடினர்.
இருதரப்பு உறவுகள் மற்றும் உக்ரைன் மோதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர் என கூறப்படுகிறது.
இது குறித்து ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரை சந்திப்பதில் மகிழ்ச்சி இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கும் வாய்ப்பு. என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story