மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்.. விரைவில் வருகிறது புதிய வசதி


மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்.. விரைவில் வருகிறது புதிய வசதி
x

தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்க புதிய வசதியை மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது.

புதுடெல்லி,

தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்க புதிய வசதியை மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது. CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி வரும் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விரைவில் அறிமுகம் ஆகும் இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும்.

இதற்காக என்ன செய்ய வேண்டியது என்னவென்றால், CEIR இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். அதேபோல செல்போனின் மாடல், IMEI எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். தகவல் சரியாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் செல்போன் முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும்.


Next Story