'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...!
'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ராக்கெட்டில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்த் செயற்கைகோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.
#WATCH | Indian Space Research Organisation (ISRO), launches its advanced navigation satellite GSLV-F12 and NVS-01 from Sriharikota.
— ANI (@ANI) May 29, 2023
(Video: ISRO) pic.twitter.com/2ylZ8giW8U