இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,529- ஆக குறைந்துள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 69- குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒடிசா மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை மொத்த பாதிப்புடன் ஒப்பிடும் போது 0.01 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 98.80 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.93 கோடியாக உயர்ந்துள்ளது.