புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்த ரிசாட்-2 செயற்கைகோள்..!!
விண்ணில் ஏவிய 13 ஆண்டுகளுக்கு பிறகு ரிசாட்-2 செயற்கைகோள் புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்தது.
புதுடெல்லி,
கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி, பி.எஸ்.எல்.வி.-சி12 ராக்கெட் மூலம் ரிசாட்-2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் எடை வெறும் 300 கிலோ ஆகும். அதன் செயல்பாடுகளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள மல்டி ஆப்ஜெக்ட் டிராக்கிங் ரேடார் கண்காணித்து வந்தது. அதில் கிடைத்த தரவுகள், ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன.
13½ ஆண்டுகள் கழிந்த நிலையில், ரிசாட்-2 செயற்கைகோள், கட்டுப்பாடின்றி புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் மீண்டும் நுழைந்துள்ளது. அதில் எரிபொருள் எதுவும் மிச்சம் இல்லை. எனவே, எரிபொருளால் ஏற்படும் மாசுபாட்டுக்கோ, வெடிவிபத்துக்கோ வாய்ப்பு இல்லை. ரிசாட்-2 செயற்கைகோள், இந்திய பெருங்கடலில் இந்தோனேஷியா நாட்டின் ஜகார்தா அருகே விழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story