மனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கி உலக சாதனை


மனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கி உலக சாதனை
x

இந்த நிகழ்வில் மாணவர்கள் உட்பட 5 ஆயிரத்து 335 பேர் ஒன்றிணைந்து இந்திய புவியியல் வரைபடத்தை உருவாக்கினர்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் புவியியல் வரைபடத்தை உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து படைத்த சாதனை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்வில் பள்ளி மாணவர்கள், சமூக சேவகர்கள் உட்பட 5,335 பேர் ஒன்றிணைந்து இந்திய வரைபடத்தை உருவாக்கினர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story