பெங்களூருவில் தகுதி இல்லாத சுரங்க சாலைகள் விரைவில் மூடப்படும்


பெங்களூருவில் தகுதி இல்லாத சுரங்க சாலைகள் விரைவில் மூடப்படும்
x

சுரங்க சாலையில் தேங்கிய நீரில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தகுதி இல்லாத சுரங்க சாலைகள் விரைவில் மூடப்படும் என மாநகராட்சி தலைமை கமிஷனர் கூறி உள்ளார்.

பெங்களூரு:-

இளம்பெண் பலி

ஆந்திராவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது 22). இவர் பெங்களூருவில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பெங்களூருவுக்கு வந்த அவரது குடும்பத்தினரை சுற்றுலா அழைத்து செல்ல பானு ரேகா முடிவு செய்தார். இதற்காக அவர் வாடகை கார் ஒன்றை பதிவு செய்து சுற்றுலா சென்றார். இந்த நிலையில் பெங்களூரு கே.ஆர். சர்க்கிள் அருகே அவர்கள் காரில் சென்றனர். அப்போது டிரைவர், அருகில் உள்ள சுரங்க சாலை வழியாக காரை இயக்கினர். அப்போது பலத்த மழை காரணமாக அங்கு மழை நீர் தேங்கி கிடந்தது. அதில் கார் சிக்கியது.

அப்போது அங்கிருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர். இதில் பானு ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மாநகராட்சி கமிஷனர்

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சுமார் 20 சுரங்க சாலைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்த மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு கே.ஆர். சர்க்கிள் அருகே உள்ள சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் இன்போசிஸ் பெண் ஊழியர் சிக்கி உயிரிழந்தார்.

விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. எனவே நகரில் உள்ள 20 முக்கிய சுரங்க சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்க வேண்டும். மேலும் வரும் நாட்களில் பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்ததை தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் 41 குழுக்

களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மழை நேரங்களில் களப்பணியில் ஈடுபட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

50 மில்லி மீட்டர்

நேற்று (நேற்று முன்தினம்) பெங்களூருவில் 50 மில்லி மீட்டர் மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்கள் கொட்டிய கனமழையே பெங்களூருவை புரட்டி போட்டதற்கு காரணம். பெங்களூருவில் உள்ள அனைத்து சுரங்க சாலைகளும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி இல்லாத சுரங்க சாலைகள் விரைவில் முடப்படும்.

மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் ராஜ கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கனமழை பெய்து, அந்த பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதை சரிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story