இன்ஸ்டாகிராம் திடீரென செயல்படாததால் பயனர்கள் பரிதவிப்பு!


இன்ஸ்டாகிராம் திடீரென செயல்படாததால் பயனர்கள் பரிதவிப்பு!
x

இன்ஸ்டாகிராம் பக்கம் பல பயனர்களுக்கு செயல்படவில்லை என்று புகார் எழுந்தது.

புதுடெல்லி,

உலகளவில் பிரபலமான சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று இன்ஸ்டாகிராம் பக்கம் பல பயனர்களுக்கு செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. பெரும்பாலான பயனர்களுக்கு முகப்பு பக்கம் மற்றும் தங்களது சுயவிவரக்குறிப்பு பக்கம் தெரியவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

முன்னதாக, நேற்று காலை 9.45 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது, அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்கு அதிகமான மக்கள் இன்ஸ்டா பக்கம் இயங்கவில்லை என்று புகாரளித்ததாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, மதியம் 12.45 மணி நிலவரப்படி, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, பெங்களூரு மற்றும் பல முக்கிய நகரங்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கம் எடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் செயலிழப்பு குறித்து உறுதிப்படுத்தவில்லை மற்றும் அதற்கான சரியான காரணம் என்ன என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், டுவிட்டரில் உள்ள பல பயனர்கள் செயலிழப்பு குறித்து புகாரளிக்க தொடங்கிவிட்டனர்.

ஆனால், பல முக்கிய நகரங்களில் மட்டுமே இன்ஸ்டா பக்கம் எடுக்கவில்லை என்றும், பல ஊர்களில் இன்ஸ்டா பக்கம் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இன்ஸ்டா ஏன் இயங்காமல் போனது என்ற காரணம் மட்டும் இதுவரை அறியப்படவில்லை.


Next Story