முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமா?


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமா?
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா துமகூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றுவது குறித்து கட்சி மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். வருகிற சுதந்திர தின விழாவுக்கு முன்பு இந்த மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

பசவராஜ் பொம்மை கடந்த ஓராண்டில் சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளார். சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் 8, 10 மாதங்கள் இருந்தபோது முதல்-மந்திரிகள் மாற்றப்பட்ட வரலாறு உள்ளது. அதே போல் கர்நாடகத்திலும் முதல்-மந்திரியை மாற்ற கட்சி மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். மத்திய மந்திரியாக இருக்கும் ஷோபா புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்படுவாரா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை முதல்-மந்திரி ஆனால் எனக்கு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு சுரேஷ்கவுடா கூறினார்.



Next Story