மாடால் விருபாக்ஷப்பாவுக்கு முன்ஜாமீன் விஷயத்தில் அரசின் தலையீடு உள்ளதா?


மாடால் விருபாக்ஷப்பாவுக்கு முன்ஜாமீன் விஷயத்தில் அரசின் தலையீடு உள்ளதா?
x

மாடால் விருபாக்‌ஷப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்ட விஷயத்தில் அரசின் தலையீடு உள்ளதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மரங்கள் அகற்றம்

பால் பயன்பாடு குறைந்துள்ளது என்றால், பால் பண்ணை தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது என்று அர்த்தம். விவசாயிகளுக்கு எதிரான கால்நடைகள் பாதுகாப்பு சட்டம், தோல் நோயை கட்டுப்படுத்துவதில் தோல்வி, விலைவாசி உயர்வு போன்றவை தான் அதற்கு காரணம். பெயருக்கு கால்

நடைகளை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் பா.ஜனதா, கால்நடைகளை பாதுகாக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

பிரதமர் மோடியின் வருகைக்காக சாலையோரமும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும் உள்ள மரங்களை வெட்டி அகற்றுகிறார்கள். முன்பு இரும்பு பாலம் கட்ட மரங்களை வெட்ட முடிவு செய்தபோது, சுற்றுச்சூழல் பெயரில் அதை பா.ஜனதா கடுமையாக எதிர்த்தது. இப்போது அந்த ஆர்வம் எங்கே போனது?. மாடால் விருபாக்ஷப்பா வீட்டில் ரூ.8 கோடி இருந்ததை லோக்அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். இது விவசாய தொழில் மூலம் கிடைத்த வருவாய் என்று அவர் சொல்கிறார். பிரதமர் மோடியின் திட்டங்களால் விவசாயிகளின் வருமானம் நூற்றுக்கணக்கான மடங்கு அதிகரித்துள்ளதா?.

விருபாக்ஷப்பாவுக்கு முன்ஜாமீன்

சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம், பா.ஜனதாவினருக்கு ஒரு சட்டம் என்பது போல், ஒரே நாளில் மாடால் விருபாக்ஷப்பாவுக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளதாக வக்கீல்கள் சங்கம் குறை கூறியுள்ளது. இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பதில் என்ன? அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் அரசின் தலையீடு உள்ளதா?. காட்டுத்தீ காட்டை மட்டுமல்ல, மனிதர்களையும் காவு வாங்கும். காட்டுத்தீயை அரசு தீவிரமாக கருதாமல் இருப்பது ஏன்?.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Next Story