அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வது தான் சபாநாயகர் பணி - யு.டி.காதர் பேட்டி


அனைத்து உறுப்பினர்களையும்  அரவணைத்து செல்வது தான்  சபாநாயகர் பணி - யு.டி.காதர் பேட்டி
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வது தான் சபாநாயகர் பணி என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

மங்களூரு-

அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வது தான் சபாநாயகர் பணி என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பற்றவராக...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கர்நாடக சபாநாயகர் யு.டி.காதர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மங்களூரு தொகுதியில் போட்டியிட்டு ெவற்றி பெற்ற எனக்கு சபாநாயகர் அந்தஸ்து கிடைத்துள்ளது. எனது ெதாகுதி மக்களின் கஷ்டங்களை அறிந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். தொகுதி மக்கள் எப்போதும் என்னை ஆசீர்வதிப்பார்கள். சபாநாயகர் என்பது சாதாரண பணி கிடையாது. கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும். இதனால் நான் கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்து வருகிறேன். அனைத்து கட்சிகளையும், உறுப்பினர்களையும் ஒரே மாதிரி பார்த்து செயல்பட வேண்டும்.

சபாநாயகர் பணி

சட்டசபையில் ஒரு உறுப்பினரை பேச அனுமதிக்காவிட்டால் பிரச்சினை ஏற்படும். அதனை சமாளித்து தான் ஆக வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு பேச அவகாசம் கொடுக்க வேண்டும். முதல் முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.க்களுக்கு பேச முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் சபாநாயகராக பொறுப்பேற்று உள்ளேன். சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே பிரச்சினைகள் நடந்தாலும், சபைக்கு வெளியே நண்பர்களாக தான் இருப்பார்கள். யாருக்கும், யார் மீதும் தனிப்பட்ட கோபமோ, வன்மமோ கிடையாது. அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வது தான் சபாநாயகர் பணி. இதனை நான் முழு மகிழ்ச்சியோடு செய்கிறேன்.

யாராலும் யூகிக்க முடியாது

5 ஆண்டுகளும் முழுமையாக சபாநாயகராக இருப்பேனா என்று எனக்கு ெதரியாது. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தற்போது இந்த பொறுப்பை அனுபவித்து திறம்பட பணியாற்றி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன கிடைக்கும், என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. கிடைத்தவற்றை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு திறம்பட செய்வது தான் சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story