ஜனாதிபதி தேர்தலில் ஆதிவாசி பெண்ணை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காதது துரதிர்ஷ்டம்- பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி


ஜனாதிபதி தேர்தலில் ஆதிவாசி பெண்ணை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காதது துரதிர்ஷ்டம்- பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி
x

ஜனாதிபதி தேர்தலில் ஆதிவாசி பெண்ணை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காதது துரதிர்ஷ்டம் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 70 சதவீத வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெறுவார். எங்கள் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ஆதிவாசி பெண் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார். ஆதிவாசி பெண்ணை அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் முதல் முறையாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்துல் கலாம், 2-வது முறையாக ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஆகியோரை ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்தோம். இப்போது ஆதிவாசி இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளோம். ஆனால் அவரை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காதது துரதிர்ஷ்டம். சித்தராமையா பேச்சுக்கு, பேச்சு சமூகநீதி குறித்து பேசுகிறார். அப்படி என்றால் ஆதிவாசி பெண்ணை ஆதரிக்காதது ஏன்?.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.


Next Story