மைசூரு நகரில் மழை பெய்தது
மைசூரு நகரில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மைசூரு:
கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக தலைநகர் பெங்களூரு, கடலோரம் மற்றும் மலைநாடு, வடகர்நாடக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மைசூருவிலும் கனமழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை, மதியம் வெயில் இருந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் மைசூரு தசரா பணிகள் சிறிதுநேரம் முடங்கியது. மின்விளக்குகள் தாமதாக ஜொலிக்க விடப்பட்டது. தீடிரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story