காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற காரணமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.சி.க்கு பால் அபிஷேகம்


காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற காரணமாக இருந்த  ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.சி.க்கு பால் அபிஷேகம்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற காரணமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.சி.க்கு பால் அபிஷேகம் செய்து, பாராட்டியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கமகளூரு-

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற காரணமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.சி.க்கு பால் அபிஷேகம் செய்து, பாராட்டியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசிற்கு ஆதரவு

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் பலர் தோல்வியடைந்திருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சிக்கமகளூருவில் கடந்த 19 ஆண்டுகளாக இருந்த சி.டி.ரவி இந்த முறை தோல்வியடைந்துள்ளார். இதன் பின்னணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் அந்த நேரத்தில் ஜனதா தளம் (எஸ்) காங்கிரசிற்கு ஆதரவு அளித்து தொங்கு சட்டசபை அமைய வழிவகை செய்யலாம் என்று நினைத்திருந்தனர். இதற்காக ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த போஜேகவுடா, தனது கட்சி வேட்பாளர் திம்மா செட்டிக்கு ஆதரவு அளிக்காமல், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தம்மைய்யாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

பால் அபிஷேகம்

இதனால் ஜனதா தளம் (எஸ்) தொண்டர்களின் ஆதரவு காங்கிரசிற்கு கிடைத்தது. இந்த ஆதரவால் ஜனதா தளம் (எஸ்) கட்சி மற்றும் பா.ஜனதா வேட்பாளரான சி.டி.ரவி ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். தம்மைய்யா வெற்றி பெற்றார். இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தம்மைய்யாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. போஜேகவுடாவிற்கு அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பாராட்டு விழா எடுத்துள்ளனர். அதாவது நேற்று காலையில் போஜேகவுடாவை அவரது வீட்டில் சந்தித்த ஜனதா தளம் (எஸ்) கட்சி தொண்டர்கள், வாழ்த்துகளை கூறியதுடன், பால் அபிஷேகமும் செய்தனர். இந்த சம்பவம் தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story