ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: மோடி அரசு அதானியை பாதுகாக்கிறது என்பது தெளிவாகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:  மோடி அரசு அதானியை பாதுகாக்கிறது என்பது தெளிவாகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Feb 2023 7:58 PM IST (Updated: 8 Feb 2023 8:51 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமரின் பேச்சு திருப்தியளிக்கவில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஜனாதிபதி உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை ஜனாதிபதி வழங்கினார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் 2004-2014 அடங்கிய பத்தாண்டுகாலம் ஊழல்கள் நிறைந்தது. நாடு முழுவதும் அந்தப்பத்தாண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்தநிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் மோடி பேச்சு திருப்தி அளிக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு திருப்தியளிக்கவில்லை. அதானி தனது நண்பர் இலையெனில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என பிரதமர் கூறியிருக்க வேண்டும் என்றும் தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதானி தனது நண்பர் இல்லையெனில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும். தொழிலதிபர் அதானியை பிரதமர் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகிறது.

மேலும், அதானி விவகாரம் குறித்து தான் எழுப்பிய கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என மக்களவை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.


Next Story