யானை தந்தம் கடத்தல்; 2 பேர் கைது
மடிகேரியில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடகு;
குடகு மாவட்டம் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காடகெரே சந்திப்பில் யானை தந்தத்தை விற்பனை செய்ய 2 பேர் நிற்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 பேர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்த வனத்்துறையினர் பையை கைப்பற்றி பார்த்தனர்.
அதில் யானை தந்தம் இருந்தது. அந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மடிகேரியை சேர்ந்த அதீத் மற்றும் சுபாஷ் என்று தெரியவந்தது.
கைதான 2 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story