ஜம்முவில் 3 தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தது இந்திய ராணுவம்


ஜம்முவில் 3 தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தது இந்திய ராணுவம்
x

ஜம்முவில் 3 தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தது இந்திய ராணுவம்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரை மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு இரண்டாக பிரித்தது. இந்தநிலையில் , பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மாநிலமும் தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகளை உயிருடன் ராணுவம் சுற்றி வளைத்து ராணுவம் கைது செய்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் போது ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story