மம்தா பானர்ஜி குறித்த அவதூறான கார்ட்டூன்களைப் பகிர்ந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை
மம்தா பானர்ஜி குறித்த அவதூறான கார்ட்டூன்களைப் பகிர்ந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
கொல்கத்தா,
மம்தா பானர்ஜி மற்றும் முகுல் ராய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கார்ட்டூன் அனுப்பியதற்காக கைது செய்யப்பட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று, கிழக்கு ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மாநில அரசு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் அவரை இந்த கிரிமினல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அலிபூர் மாவட்ட கோர்ட்டு, கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
என்னுடைய யுத்தம் அனைத்து வகையான அட்டூழியங்களுக்கும் எதிரானது என்று மகாபத்ரா கூறியுள்ளார். மேலும், அரசுக்கு எதிரான குரலை நிறுத்த குண்டர்களால் மேற்கு வங்காள அரசு, காவல்துறை நிர்வாகம் மற்றும் ஆளுங்கட்சி சதி செய்துள்ளது என்று கூறினார்.