கர்நாடக அரசு பஸ் டிக்கெட்டில் 'ஜெய் மகாராஷ்டிரா' வாசகம்


கர்நாடக அரசு பஸ் டிக்கெட்டில் ஜெய் மகாராஷ்டிரா வாசகம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு பஸ் டிக்கெட்டில் ‘ஜெய் மகாராஷ்டிரா’ வாசகம் என்று அச்சிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

வடகர்நாடகத்தில் பெலகாவி, கலபுரகி உள்ளிட்ட சில மாவட்டங்களை மராட்டியம் தங்களுக்கு உரியது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கர்நாடகம்-மராட்டியம் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ் டிக்கெட்டில் 'ஜெய் மகாராஷ்டிரா' என்று அச்சிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கதக் மாவட்டம் முண்டரகி தாலுகா தோனி என்ற கிராமத்தில் இருந்து கதக் நகருக்கு ஒரு கர்நாடக அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் 'ஜெய் மகாராஷ்டிரா' என்று அச்சிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், கண்டக்டரிடம் கேட்ட போது அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. அந்த டிக்கெட்டின் புகைப்படத்தை சில பயணிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story