சிறையில் மசாஜ் செய்யப்பட்ட விடியோ வெளியீடு: அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு வாபஸ்


சிறையில் மசாஜ் செய்யப்பட்ட விடியோ வெளியீடு: அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு வாபஸ்
x

சிறையில் மசாஜ் செய்யப்பட்ட விடியோ வெளியீடு தொடர்பான அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை டெல்லி மந்திரி திரும்ப பெற்றார்.

புதுடெல்லி,

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

அதைத்தொடர்ந்து சிறையில் மேலும் பல வசதிகளை அவர் அனுபவிக்கும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வழக்கில் பிரமாண பத்திரம், வீடியோக்கள் எதையும் வெளியிடக்கூடாது என அமலாக்கத்துறையினருக்கு கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இதையும் மிறி மேற்படி வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் சத்யேந்தர் ஜெயின். இந்த மனுவை நேற்று அவர் திரும்ப பெற்றார்.

இந்த விவகாரத்தில் பொருத்தமான மன்றத்தை அணுகி நிவாரணம் பெற உள்ளதாகவும், எனவே இந்த மனுவை திரும்பப்பெறுவதாகவும் மந்திரியின் வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார்.


Next Story