ராகுல் காந்திக்கு சிறை தண்டனை... எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்க திட்டம்
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று காலை 10 மணிக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சௌக் பகுதி வரை நடந்து போராட்டம் நடத்தவும், அதன் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிடப்படுடள்ளது.
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை... எதிர்க்கட்சிகள் இன்று குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்#rahulgandhi #oppositionparties https://t.co/1n950eRqk6
— Thanthi TV (@ThanthiTV) March 24, 2023