டெல்லிக்கு வந்துள்ள ஜெர்மன் மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை


டெல்லிக்கு வந்துள்ள ஜெர்மன் மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 6 Dec 2022 3:45 AM IST (Updated: 6 Dec 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஜெர்மன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அன்னலேனா பேயர்பாக், 2 நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார்.

புதுடெல்லி,

ஜெர்மன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அன்னலேனா பேயர்பாக், 2 நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். அவருடன், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எரிசக்தி, வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், அன்னலேனா பேயர்பாக் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா, ஜெர்மனியின் இயற்கையான கூட்டாளி. 21-ம் நூற்றாண்டில் சர்வதேச நாடுகள் தரவரிசையை வடிவமைப்பதில், இந்தியா உறுதியான செல்வாக்கை கொண்டிருக்கும்'' என்று கூறியுள்ளார்.


Next Story