காஷ்மீரில் சிவகோரி குகைக்கோயில் அருகே கல் சரிவு - 2 பக்தர்கள் பலி!
காஷ்மீரில் சிவகோரி சிவாலய குகைக்கோயில் அருகே கல் சரிவு ஏற்பட்டதால் அதில் சிக்கி 2 பக்தர்கள் பலியாகினர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சிவகோரி சிவாலய குகைக்கோயில் அருகே நடைபாதையில், திடீரென கல் சரிவு ஏற்பட்டதால் அதில் சிக்கி 2 பக்தர்கள் பலியாகினர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் காஷ்மீரின் ராஜொரியை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
திரிகூட மலையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை உள்ளிட்ட புனித யாத்திரைக்காக அவர்கள் சென்றதாக தெரிய வருகிறது. கற்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின், பயணிகள் அந்த வழியாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story