ஜனதா தளம் (எஸ்) 120 இடங்களை பிடித்து தனிபெரும்பாமையுடன் ஆட்சி அமைக்கும்
ஜனதா தளம் எஸ் கட்சி 120 இடங்களை பிடித்து தனிப்பெருமையுடன் ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
மண்டியா:-
பஞ்சரத்னா யாத்திரை
மண்டியாவில் உள்ள சில்வர் ஜூப்ளி பூங்காவில் பஞ்சரத்னா யாத்திரை நடந்தது. இந்த பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறும்போது:-கர்நாடகத்தில் கடந்த 26 நாட்களாக மாநிலத்தில் நடந்து வரும் பஞ்சரத்னா யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பஞ்சரத்னா யாத்திரை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவை அதிர வைத்துள்ளது. கர்நாடக தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 15 இடம் மட்டுமே கிடைக்கும் என்று கூறியவர்கள், தற்போது 60 இடம் கிடக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் நான் ஜனதா தளம் (எஸ்) கட்சி 120 இடங்களை பிடித்து தனிப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகிறேன். ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் வாங்காதப்படிக்கு திட்டம் வகுத்து கொடுக்கப்படும். விவசாயிகளின் வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
ஆட்சி அமைப்போம்
நான் ஏற்கனவே 2 முறை முதல்-மந்திரி ஆகிவிட்டேன். எனக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை இல்லை. பஞ்சரத்னா யாத்திரை என்னுடைய சுயநலத்திற்காக இல்லை. மக்கள் குறைகளை கேட்டறிந்து மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவேண்டும் என்பதற்காக தொடங்கினேன். இந்த பஞ்சரத்னா யாத்திரையின் மூலம் மக்களின் குறைகளை கேட்டறிய முடிகிறது. மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், நோயாளிகளின் நிறை, குறைகளை நேரடியாக பார்க்க முடிகிறது. அடுத்த 5 ஆண்டு ஜனதா தளம் (எஸ்) கட்சி தனிப்பெருமையுடன் ஆட்சிக்கு பிடிக்கும். இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.