ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் பதவியை வழங்கினால் திறம்பட நிர்வகிப்பேன்-ஜி.டி.தேவேகவுடா பேட்டி


ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் பதவியை வழங்கினால் திறம்பட நிர்வகிப்பேன்-ஜி.டி.தேவேகவுடா பேட்டி
x

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் பதவியை எனக்கு வழங்கினால் திறம்பட நிர்வகிப்பேன் என்று ஜி.டி.தேவேகவுடா கூறினார்.

மைசூரு:-

ஜி.டி.தேவேகவுடா

மைசூரு நேற்று முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்று சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் காங்கிரசில் இப்போது ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் புதியவர்கள் அந்த கட்சிக்கு சென்றால் அவர்களுக்கு உரிய இடம் கிடைக்காது. ஒருவேளை வலுக்கட்டாயமாக சென்றால் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த யாரும் காங்கிரசில் சேர மாட்டார்கள்.

நம்பிக்கை

காங்கிரசாருக்கு பிற கட்சியினரை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை சேர்த்துக் கொண்டாலும் அவர்களுக்கு பதவிகள் ஏதும் வழங்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டு காங்கிரசார் 'ஆபரேஷன் கை' திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவராக சி.எம்.இப்ராகிம் உள்ளார். அதனால் நான் அந்த பதவிக்கு ஆசைப்படவில்லை.

ஒருவேளை கட்சி என் மீது நம்பிக்கை வைத்து தலைவர் பதவியை கொடுத்தால் நான் அதை திறம்பட நிர்வகிப்பேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். கர்நாடக அணைகள் முழுமையாக நிரம்பாத நிலையிலும் மாநில அரசு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இது சரியல்ல.

குடிநீருக்கு...

கர்நாடகத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. அதனால் காவிரியில் தமிழகத்திற்க் தண்ணீர் திறக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே தான் போட்டி. இதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story