ஜெயலலிதாவின் சேலைகளை ஏலம் விடும் விவகாரம்


ஜெயலலிதாவின் சேலைகளை ஏலம் விடும் விவகாரம்
x

ஜெயலலிதாவின் சேலைகளை ஏலம் விடும் விவகாரம் தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஒத்திவைத்தது

பெங்களூரு:-

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பின்படி சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு சிறையில் இருந்தனர். இந்த நிலையில் தகவல் பெறும் உரிமை சட்ட சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களில் குறிப்பாக 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகளை ஏலம் விடுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதம் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு அவர் கோரினார். அவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதன் மீது சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் ஆஜராகி, தான் கேட்ட தகவலை சட்டப்படி குறித்த காலத்தில் தகவல் ஆணையம் வழங்காததால், அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். அதைத்தொடர்ந்து அந்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story