ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு


ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
x

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 9 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எழுதி இருந்தார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை 1.56 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மொத்தம் 1.56 லட்சம் மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய நிலையில், 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 6 ஆயிரத்து 516 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Related Tags :
Next Story