2023- ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 5 ஜி சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்பு
2023- ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை கிடைக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாட்டில் 5ஜி சேவையை முதற்கட்டமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டில் 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவைகளை அறிமுகமாகிறது.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் இந்த விழாவில் பேசிய ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி, 2023- ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை கிடைக்கும்" என்றார்.