கொப்பா அருகே குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை
கொப்பா அருகே குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 45). விவசாயி. இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. மேலும் அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் கொப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பித்தப்பையில் பிரச்சினை இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டும் என கூறினார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானார். மேலும் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் தற்கொலை செய்து ெகாள்ள முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் அவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து ெகாண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொப்பா போலீசார் குளத்தில் இருந்து அவரது உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.