தொடரும் குற்ற சம்பவங்கள்: 'உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது' மாயாவதி குற்றச்சாட்டு


தொடரும் குற்ற சம்பவங்கள்: உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது மாயாவதி குற்றச்சாட்டு
x

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதை முன்வைத்து மாநில அரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'யமுனை நதியில் பணி முடிக்கப்படாத பாலம் காரணமாக ஏராளமான மக்கள் படகு விபத்தில் கொல்லப்பட்டு உள்ளனர். ஹபூருக்கு அழைத்து வந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். தற்போது ஹமிர்பூரில் வலியை கொடுக்கும் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும், மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதை நிரூபித்து உள்ளன. மாநிலத்தில் வளர்ச்சியை பற்றி அரசு தம்பட்டம் அடிப்பது வெறும் ஏமாற்று வேலை' என சாடியுள்ளார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறுமை மற்றும் வேலையின்மை உள்ளதாக கூறியுள்ள மாயாவதி, அரசு இதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ேகட்டுக்கொண்டுள்ளார்.


Next Story