கே.ஆர்.எஸ். அணையின் நீர் மட்டம் 103 அடியை தாண்டியது


கே.ஆர்.எஸ். அணையின் நீர் மட்டம் 103 அடியை தாண்டியது
x

கே.ஆர்.எஸ். அணையின் நீா் மட்டம் ௧௦௩ அடியை தாண்டியது

மைசூரு

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது.


இந்த நிலையில் இவ்விரு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,488 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,417 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.


அதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284.00 அடி நீர் கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,262.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,947 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3,417 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story