ஆப்கானிஸ்தானை சேர்ந்த 100 பேருக்கு விசா மத்திய அரசு வழங்கியது
. சீக்கியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்தது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா மீது நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 60 வயதான சீக்கியர் ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். சீக்கியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்தது.. சீக்கியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்தது.
இந்த நிலையில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் சுமார் 100 பேர் இந்தியா வருவதற்கு அவர்களுக்கு மின்னணு முறையில் விசா வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காபூல் குருத்வாரா தாக்குதலுக்குப் பிறகு, 100-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இந்தியா முன்னுரிமை அடிப்படையில் இ-விசா வழங்கியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.