கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனருக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனருக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மை ய இயக்குனராக இருப்பவர் டாக்டர் பி.வெங்கட்ராமன். கடந்த ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்ற இவர், இம்மாதம் 30-ந் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தது.
இந்நிலை யில் வெ ங்கட்ராமனுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற் கான முன்மொழிவுக்கு மத்திய மந்திரிசபையின்நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் புதிதாக பல பிரிவுகளை ஏற்படுத்திய வெங்கட்ராமன், கூடங்குளம் 1,2 அணுமின் உலைகளில் தர ஆய்வை மேற்கொண்ட குழுவிலும் இடம் பெற்றிருந்தார். பாதுகாப்புத்துறை ,'இஸ் ரோ'வுடனும் இணைந்து செயல்பட்டுள்ள இவர், ஹோமி பாபா அறிவியல் தொழில்நுட்ப விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story