புதிய பாராளுமன்ற திறப்பு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ள முடிவு..!


புதிய பாராளுமன்ற திறப்பு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ள முடிவு..!
x

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

சென்னை

பழைய பாராளுமன்றத்தைத் திறந்து 96 வருடங்கள் கடந்த நிலையில் தற்பொழுது பாரத பிரதமர் நரேந்திர மோடியினால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய பாராளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமரே திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாட்டின் முதல் குடிமகளாகிய ஜனாதிபதியே புதிய பாராளுமன்றத்தினை திறக்க வேண்டும் என பல கட்சிகள் வற்புறுத்தின. மேலும் ஜனாதிபதி திறந்துவைக்காவிடில், புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவினை புறக்கணிப்போம் என்றும் கூறின.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

புதிய பாராளுமன்றத் திறப்பு அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய பெருமைமிகு தருணம். இந்த வரலாற்று தருணத்துக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

தேசிய நலன் கருதி புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆனால் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது.

பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும். அவர் ஏன் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு எந்த காரணங்களும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பாராளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அது சட்டவடிவு பெறும். பாராளுமன்றத் கூட்டத்தொடரை நடத்தவும் ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.

அதனால் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை பிரதமர் அழைக்க வேண்டும். அதுபோல இவ்விழாவில் கலந்துகொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




Next Story