கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் காமலீலை-வரி வசூல் அலுவலர், பெண் ஊழியர் பணி இடைநீக்கம்
சிக்பள்ளாப்பூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் காமலீலையில் ஈடுபட்ட வரிவசூல் அலுவலர், பெண் ஊழியர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:-
காம களியாட்டம்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா தும்மனஹள்ளியில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு வரிவசூல் அலுவலராக டி.வி.அஸ்வத் நாராயணா என்பவர் பணியாற்றி வந்தார். அதுபோல் இதே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக திருமணமான பெண் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவர் இடையே கள்ளக்காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இதனால் இந்த ஜோடி அடிக்கடி அலுவலகத்தில் யாரும் இல்லாத சமயத்தில் காம களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வீடியோ வைரல்
இது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அரசல்புரசலாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் வரிவசூல் அலுவலர், அந்த பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதை அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த ஆபாச வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
பணி இடைநீக்கம்
இதையடுத்த கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையில், டி.வி.அஸ்வத் நாராயணா, கம்ப்யூட்டர் பெண் ஊழியருடன் காம லீலையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் பணி இடைநீக்கம் செய்து கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.