விபசாரம் பெயரில் மோசடி செய்து கைதானவர் கன்னட நடிகர்


விபசாரம் பெயரில் மோசடி செய்து கைதானவர் கன்னட நடிகர்
x

சுத்தகுண்டேபாளையாவில் விபசாரம் பெயரில் மோசடி செய்ததில் கைதானவர் கன்னட நடிகர் என்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:-

பெங்களூரு சுத்தகுண்டேபாளையா போலீசார் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து விபசார செயலில் பதிவு செய்து வந்த மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஸ், மோகன், மஞ்சுநாத் என்கிற சஞ்சு என்கிற 6 பேரை கைது செய்து இருந்தனர். விசாரணையில் இளம்பெண்கள் புகைப்படத்தை விபசார செயலியில் பதிவு செய்யும் 6 பேரும், இளம்பெண்களின் புகைப்படத்தை பார்த்து உல்லாசம் அனுபவிக்க விரும்புபவர்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மஞ்சுநாத் என்கிற சஞ்சு என்பவர் கன்னட நடிகர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்து உள்ளது.


Next Story