தொழில் முதலீட்டாளர்களுக்கு 'காந்தாரா' படம் உந்துசக்தி- மத்திய மந்திரி பியூஸ்கோயல் பேச்சு


தொழில் முதலீட்டாளர்களுக்கு காந்தாரா படம் உந்துசக்தி-  மத்திய மந்திரி பியூஸ்கோயல் பேச்சு
x

தொழில் முதலீட்டாளர்களுக்கு ‘காந்தாரா' படம் உந்துசக்தி என்று மத்திய மந்திரி பியூஸ்கோயல் பேசியுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயல் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-கன்னடத்தில் எடுக்கப்பட்ட காந்தாரா படம் நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடுகிறது. அந்த படம் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. பல நூறு கோடி வசூலை அந்த படம் பெற்றுள்ளது. அதாவது அந்த படம் இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளது. உள்ளூர் கலாசாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. நானும் அந்த படத்தை பார்த்தேன். அந்த படத்தில் வரும் உள்ளூர் கதை உலகம் முழுவதும் சென்றடைந்து உள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் இந்த படத்தை முன்உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். அதாவது அந்த படம் முதலீட்டாளர்களுக்கு உந்துசக்தியாக உள்ளது.

இவ்வாறு பியூஸ்கோயல் கூறினார்.


Next Story