கர்நாடகா: தலித் சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 10 பேர் மீது வழக்கு பதிவு!


கர்நாடகா: தலித் சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 10 பேர் மீது வழக்கு பதிவு!
x

திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் தலித் சிறுவனை அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலித் சிறுவனை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது தலித் சிறுவன் உயர் சாதிப் பெண்ணிடம் தங்கக் காதணிகளைத் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. திருட்டு வழக்கில் சிறுவன் மீது சந்தேகம் அடைந்த உயர் சாதிப் பிரிவினர் சிலர், சந்தேகத்தின் பேரில், கடந்த வியாழன் இரவு சுமார் 9.30 மணியளவில் அந்த சிறுவனை வீட்டிற்கு சென்று வெளியே இழுத்து வந்து, கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுவனை தாக்கிய 10 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பெங்களூரில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கெம்படேனஹள்ளி கிராமத்தில், இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story