கர்நாடக பவன் கார் டிரைவர் தற்கொலை
கர்நாடக பவன் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு: டெல்லியில் கர்நாடக பவன் உள்ளது. அங்கு கார் டிரைவராக மண்டியா மாவட்டம் நாகமங்களாவை சேர்ந்த அமித் (வயது 23) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். மேலும் டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் குடியிருப்பில் அவர் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தான் தங்கி இருந்த அறையில் அமித் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் உள்ளூர் போலீசார் அமித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அமித்தின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
Related Tags :
Next Story