கர்நாடக அரசின் 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்


கர்நாடக அரசின்  2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
x

கர்நாடக அரசின் 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் கர்நாடக நில வருவாய் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிராமப்புறங்களில் விவசாயிகள் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருவதாகவும், அந்த நிலத்தை அவர்களுக்கே வழங்க வழிவகை செய்யும் வகையிலும் சட்டத்தில் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல், நிதி நிறுவனங்களில் டெபாசிட்தாரர்களின் நலனை காக்கும் நோக்கத்தில் கர்நாடக டெபாசிட்தாரர்கள் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அந்த 2 மசோதாக்களும் சட்டசபை மற்றும் மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த 2 மசோதாக்களும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.


Next Story