கர்நாடக அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு- துணை முதல்-மந்திரி டி.கே.சிவககுமார் பேட்டி


கர்நாடக அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு- துணை முதல்-மந்திரி டி.கே.சிவககுமார் பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

உரிமைக்காக போராட்டம்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட அமைப்புகளின் போராட்டத்தை தடுக்க அரசு விரும்பவில்லை. ஆனால் முழு அடைப்பு நடத்த கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய அமைப்புகள் முழு அடைப்பு நடத்தும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மக்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு கொடுத்தே தீரும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் முழு அடைப்பு நடத்த கர்நாடகத்தில் அனுமதி இல்லை. மாநிலத்தின் உரிமையை காப்பாற்ற விரும்பினால் போராட்டம் நடத்தலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

நேரில் ஆஜராக உத்தரவு

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நாளை (அதாவது இன்று) காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகளை காணொலி காட்சி மூலமாக பங்கேற்க வேண்டாம் என்று கூறியுள்ளேன். அதற்கு பதில் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேரடியாக ஆஜராகி கர்நாடகத்தில் வாதங்களை எடுத்து கூறும்படி உத்தரவிட்டுள்ளனே். காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளேன்.

தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. நாளை (இன்று) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். பா.ஜனதாவுடன் ஜனதாதளம (எஸ்) கூட்டணி அமைக்க, அக்கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் சேர்ந்து வருகின்றனர். இன்னும் பலர் காங்கிரசில் சேர தயாராக உள்ளனர். அதுபற்றி முதல்-மந்திரியுடன் ஆலோசிக்க உள்ளேன்.

இவ்வாறு டி.கே.சிவக்

குமார் கூறினார்.


Next Story