உடல் உறுப்புகள் தானத்தில் கர்நாடகம், 2-வது இடம்
உடல் உறுப்புகள் தானத்தில் கர்நாடக மாநிலம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பெங்களூரு, டிச.18-
தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் கர்நாடகம் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உடல் உறுப்புகளை தானம் செய்ய பலரும் முன்வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டில் 70 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்து இருந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 143 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதில் தட்சிண கன்னடாவில் 72 பேர் உடல் தானம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 397 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்கள் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருகின்றனர். இதனால் கர்நாடகத்தில் உடல் தானம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. முதலிடத்தில் தெலுங்கானா உள்ளது.