கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் 2 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இன்று 33 ஆயிரத்து 320 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,154 பேருக்கும், மைசூருவில் 47 பேருக்கும், ஹாசனில் 48 பேருக்கும், தார்வாரில் 73 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவமொக்கா, துமகூருவில் சிகிச்சை பலனின்றி தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 1,094 பேர் குணம் அடைந்தனர். 11 ஆயிரத்து 105 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 6 கோடியே 78 லட்சத்து ஆயிரத்து 921 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் 5.07 ஆக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Related Tags :
Next Story