லண்டனில் பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடியை பிடித்தபடி பட்டம் பெற்ற கர்நாடக மாணவர்


லண்டனில் பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடியை பிடித்தபடி பட்டம் பெற்ற கர்நாடக மாணவர்
x

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது

பெங்களூரு ,

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். அப்போது பட்டம் பெற வந்த கர்நாடகத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர் ஒருவர், கலந்துகொண்டு பட்டமளிப்பு பெற்றார்.

அப்போது அவர் மூத்த ஆசிரியர்களுடன் கைகுலுக்கிய பின்னர், அவர் கன்னட கொடியை தனது கைகளில் பிடித்து பறக்கவிட்டப்படி கம்பீரமாக சென்றார். இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில், நான் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.

நான் கன்னட கொடியை கையில் பிடித்தபடி பட்டம் பெற்றேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, கன்னட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பதிவை 1,550 பேர் மறுபதிவு செய்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோவை "லைக்" செய்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.


Next Story