பிராந்திய கட்சியால் மட்டுமே கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்கு சாத்தியம்


பிராந்திய கட்சியால் மட்டுமே கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்கு சாத்தியம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிராந்திய கட்சியால் மட்டுமே கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்கு சாத்தியம் என்று ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லில் கரகஜக்கனல்லா அருகே எ.மேடஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கோட்டிகெரே மஞ்சண்ணா கலந்து கொண்டு பேசியதாவது:-

மாநில பா.ஜனதா அரசு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் வாங்குவதை ஒப்பந்ததாரர்களே தெரிவித்துள்ளனர். பிராந்திய கட்சியால் மட்டுமே கர்நாடக மாநில முன்னேற்றத்திற்கு சாத்தியம். அதற்கு உதாரணம் டெல்லி, கேரள மாநிலங்களின் ஆட்சி. எனவே, வரும் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். வரும் காலத்தில் குமாரசாமி தான் முதல்-மந்திரி. அதை யாராலும் தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தாலுகா தலைவர் தேவேகவுடா மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story