கார்த்தி சிதம்பரம் ஜூலை 12-ந் தேதி வரை கைது இல்லை; டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை உறுதி


கார்த்தி சிதம்பரம் ஜூலை 12-ந் தேதி வரை கைது இல்லை; டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை உறுதி
x

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு முன் நடைபெற்றது.

புதுடெல்லி,

விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு, கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு முன் நடைபெற்றது. முன்ஜாமீன் மனுவை இறுதியாக விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அப்போது கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என்ற உறுதியை அமலாக்கத் துறை அளிக்குமா அல்லது கைது செய்ய தடை விதிக்கட்டுமா என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் நீதிபதி கேட்டார்.

அதற்கு எஸ்.வி.ராஜு, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என உறுதியளித்தார்.

மேலும் இரு தரப்பும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணையை ஜூலை 12-ந் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அதுவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என்று அமலாக்கத் துறை அளித்த உறுதியையும் பதிவு செய்து கொண்டார்.


Next Story